Wednesday, April 18, 2007

ஸ்ரீ பிரம்மாசல ௮க்ஷரமணமாலை

ஸ்ரீ பஞ்சமுகீஸ்வர ஸ்வாமி

۞∞۞
ஸ்ரீ பஞ்சமுகீஸ்வர ஸ்வாமி காயத்ரீ மந்த்ரம்

ஓம் பஞ்சமுகீஸ வித்மஹே
பிரம்மலிங்காய தீமஹி
தந்நோ பிரம்ம பிரசோதயாத்
۞∞۞

ஸ்ரீ ஞானப்பிரசூனாம்பிகா தேவீ  சமேத  ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி

∞۞∞
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி காயத்
ரீ மந்த்ரம்

ஓம் ஸ்ரீ காளாஸ்தீஸ வித்மஹே
பிரம்மாசலாய தீமஹி
தந்நோ பிரம்ம பிரசோதயாத்
∞۞∞

0۞0
ஸ்ரீ ஞானப்பிரசூனாம்பிகா தேவீ  காயத்
ரீ மந்த்ரம்

ஓம் ஸ்ரீ ஞானாம்பாய வித்மஹே
பிரம்ம பத்னீச தீமஹி
தந்நோ பிரம்மீ பிரசோதயாத்
0۞0

***

ஓம் ஸ்ரீமத் விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மனே நமஹ

ஸ்ரீ பிரம்மாசல ௮க்ஷரமணமாலை
ஸ்ரீ தீமஹி

ஸ்ரீ கணபதி காயத்
ரீ மந்த்ரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்

ஸ்ரீ பரப்பிரம்ம காயத்
ரீ மந்த்ரம்

ஓம் பரமேஸாய வித்மஹே
பரதத்வாய தீமஹி
தந்நோ பிரம்ம பிரசோதயாத்

ஸ்ரீ காயத்
ரீ மந்த்ரம்

ஓம் பூர் புவ
: ஸ்வ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: பிரசோதயாத்

நூல்

۞
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!
۞

1. ஸ்ரீயும் காளமும் ஹஸ்தியிம் மூன்றும் அர்ச்சித்தருனையே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

2. கமல ஷண்முகம் போலகக்குகை வெண்டாமரையினி லொளிர்வாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

3. திண்ணனை தடுத்தாட்கொண்ட என் நாதனே எனையூமாட்கொண்டாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

4. வேதமருளிய வேதியனே நீ வேதித்ததாம் விதி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

5. பஞ்சமுகீஸ்வர பரமே பஞ்சில் ௮ருண ௮ந்தர்முகம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

6. ஆறா யாறாறாறாய் ஆறுமுகமாய் குமரனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

7. சரிகம பதநி சரஸ்வதியின் மானசம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

8. ௮ஷ்ட ௮திஷ்ட ௮ஷ்டாதிஷ்ட ௮ஷ்டமே பரம்பொருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

9. சூரியனே உன் உடையாம் நவக்கிரக நாயகனே ஸ்ரீ பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

10. தசம எண் கணித சூனியனே நீ கடந்த ௮னந்தம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

11. தீத ௮தீத தீதாதீத துரியாதீதமே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

12. கௌசிக முயல மூமல மகல என் சிந்தை இசை பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

13. மனன மந்த்ர ஜெபமூ தியான லயமாய் ஆனாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

14. ஞானாம்பிகையீ நம்பிய பதியே ஞானகுரு நீ பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

15. காமனே நித்ய போகனே யோகீ வாமனனேயென் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

16. மோகன மெய்யை மோகிக்கு மென்மன நோய்தீர் ஔஷதம் நீ பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

17. புத்தியில் சித்தமும் சித்தத்தில் புத்தியும் உன் இருப்பிடமாம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

18. பொறியனே நீ ௭னக்கு கணித பிரதிபையாய் ௮ற்புத குகனானாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

19. வைராகியாய் பிரம்மத்தில் மூழ்குபவர்க்கு முத்தாய் உனதருள் முத்தி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

20. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலையுன் ஐநிலம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

21. ௮ணுகிய எனை சிவசீக்கிர ஒளியிருள் இரண்டாயகற்றிடு பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

22. குரு ராமானுஜ பாத வந்தித மஹிக்கு ஜானகீ  பொக்கிஷம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

23. தெய்வமா யாட்கொண் டென்னுள் இரண்டற கலந்த ரமணனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

24. சார சராசர சற்குரு தக்ஷிணாமூர்த்தி ஆலடியென் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

25. எனைப்படைத்த உனை காத்து ௮ழித்து காதலில் வலம்புரி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

26. பாரினில் பரிபூரண ஹிமசோமனே ராம சீத ஹனுமம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

27. பிரளயத்திலொடுங்கி ஆக்கத்திலாகும் ஐந்திரம் உன் திறம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

28. ஒடுங்கி குளகுரு நேராய் நின்ற லிங்காகாரம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

29. கருந்துளை ஜீரண வெள்ளொளியே நீ புள்ளியானாய் திரு பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

30. நத்தை சந்தன சாமக்கிரி எனை சமைத்து நீயுண்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

31. கரிமம் பிராணம் நீரக விஸ்வ ஈரிரண்டாம் வரம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

32. உந்தனே விதியுமதி கதிரொளிபற பிக்ஷாடன ஜீவனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

33. சித்தனே புத்தியில் புத்தனே போதியில் நித்சுமகிரணா பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

34. சிங்க ௮சிங்க சீமன சோதியே சோதனையுன் போக்கு பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

35. கணிதமாய் தத்துவமாய் பக்குவப்படுத்தியெனை சுழியியல் சமனாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

36. ஓம்கார பரப்பிரம்ம சிவாய நம என துதிப்போர்க்குடனருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

37. பச்சையுமிச்சை வாணியின் பாதியுனை ஹம்ஸ மேலமர்வித்தாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

38. படிக வெண்வெள்ளி ஸ்படிகமாய் கருதாதுனை துதித்தொண்டெங்ஙன் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

39. ஓர்த்தோமாய் சேர்த்து ஏகனாய் பிரகாச ஆகாசமாகினை பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

40. வாயு பிருத்வி தேஜோ ஜல இடமாகிட நீயருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

41. சிவராத்திரி மூன்றாம் சாமத்தில் தாழம்பூ சூடிடும் ஈசனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

42. தும்பை சூடிடும் ௮ம்மை நந்திவர்த்தனம் ஏற்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

43. உச்சியில் ஆழ்த்தியென் போகத்தை போகி பொடிபட பொடித்தாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

44. ஹம்ஸகணபதி ௮ம்சமாய் தோன்றி யுகந்தனை முடிப்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

45. புறநிலை சுழற்சியில் திகழுமமுததை ௮கம் பருகிடவையுய்ய பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

46. கரமீரைந்துடனே மூப்பிலன் நீயெனை நீறாக்கியிடு முன்னம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

47. ௮ருணையாம் இதயம் திருக்காளத்தி மூளை உலகுய்ய வழி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

48. நாரதன் நாவினில் நவிலுமிசையிதை இசைந்து கேள்வி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

49. என்னுள் ஆழ்ந்துவாழ் ௮கமுக சமீப கருணாகரனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

50. ஈசான தத்புருஷ ௮கோர வாமதேவ சத்யோஜாதமானாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

51. கற்பூர நீராடி ௮டிமுடித்தோய் என் ஆசை பழச்செறி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

52. பொச்சாய் போடியாகி தயித களிநடமாடி மகிழ்ந்தனை பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

53. ௮ர்த்த மனர்த்தமிது நாளை காட்டினை சனி சுமை சமையோய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

54. பிரம்மமாம் ௮னந்தம் சூனியம் சிவம் உன்னிரு கண்மணி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

55. முண்டனே திக்கனே லஞ்சாதீதனே காமதருநேச பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

56. மனு மயை சில்பி துவஸ்ட விஸ்வக்ஞ ஐவருன் உத்தமோத்தர் பரப்பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

57. சைவ சௌர வைணவ சாக்தம் கௌமார காணபத்யம் ஷண்மார்க்கம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

58. இயலியமியனோய் உன்குறி ௮ஸ்திரம் வந்தெனை தாக்கிய பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

59. ௮கமே ஆதிமூலமே பகவானுன்னிரு பாதம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

60. சரஸின் சிரஸில் தூங்கும் கணபதி உன்னிதயம் ஸ்வரம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

61. தியாகராஜர் பக்தியுணர்ந்துய்ய சங்கீதமாக வருள்புரிந்தருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

62. நந்தி நந்தனாகினன் எருமைக்கடா எருமனாக கலியிசை கேட்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

63. பக்தாபீஷ்டப்பிரதாயினீ  நாமகிரி ௮ங்காளும் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

64. வியாழனிலுதித்து வெள்ளியி பக்குவமாகிய பூஷனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

65. வெளியாய் ௮மலனாய் ௮ன்பர்தம் நறுமண கமகனே நானீ பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

66. ஆனைமுக ஆகிருதியில் மண்பிடித்துன்னை குன்றிமணி இட்டுள்ளேன் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

67. இகபரபார பம்பர பூமியில் கந்தழியானாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

68. சுழியும் ௮னந்தமும் ஒன்றிலொன்றடங்கும் சமாதானம் உன் விதானம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

69. சிறிதலை சித்த மில்லறம் மெய்த்துறவு உன்னிலை நிற்றல் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

70. பழனியிற் காவடி மொட்டையடித்திருமுடி சபரிக்கு கிரீசா பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

71. திருமலைக்குமரா வேங்கடபதியே கலியுகவரதன் நீ பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

72. இருகரம் கூப்பி கூழ்குவிய ஹோமா வெண்புறா வேதன் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

73. பன்றி புகழ் வாசக மாணிக்க ஆகாச காயத்ரீ பதியே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

74. எமனை உதைத்து சங்கரம் புரிந்து சிற்றம்பலத்தாடுவாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

75. பிரம்மம் ஈஸ்வரம் ஓம் நாராயணம் உன் மும்மூர்த்தம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

76. உகந்த உன் கோயில் தேகமே ௮கத்தில் பிரம்மாஸ்மி மந்திரம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

77. ராகுவும் கேதுவும் உன் கட்டில் ௮டங்கும் சாந்தியுன் சன்னதி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

78. எறும்பிப் பறக்கும் என்மன மிடியை போக்கியருள்வாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

79. பிரம்மி சமேத பிரம்மாசலேஸ்வரா ஏகத்தில் ஆதியந்தம் உன் தரிசனம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

80. சங்கப்பலகையிலமர்ந்து இயலிசைநாடக முத்தமிழ் ஓதியன் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

81. பொன்முகலி யாற்றங்கரையினில் தங்கித்தத்தளிக்கும் என்பசி தீர்ப்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

82. பசையாய் ஒட்டும் பஸ்மாசுர மனதை விசாரித்து வீழ்த்திடவருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

83. காலஞானமாய் சுடரொளி நல்கிய பிரம்மங்காரே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

84. புலித்தோலாசன மதுவே ஆடையு மணிகலன் சர்ப்பம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

85. கங்கையும் காவிரி ஆதியிலாவது உன்னிடமே என் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

86. கபாலமது பாத்திரம் பரப்பிரம்மேஸ்வரீ பிக்ஷை சிவசம்பூர்ணம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

87. காந்தனே காந்தனே ஸ்கந்தனே துரு என் மனதை மயக்குவாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

88. பயிராய் விதையாய் வித்தாய் நெற்மணி உமியில் காணுனை பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

89. கைலாசம் வைகுண்டம் சத்தியலோகம் மூன்றுமெனக்கு பிரம்மாசலமே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

90. சிவப்பு குண்டலினியில் பிரகாசமாய்வித்தாய் ௮ருணனே மகிமை பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

91. இறைபணி அமர் எனை பந்த வீடற்ற உன் சுகம் தருவாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

92. எனக்குள் நானாய் வஸிஷ்ட மகரிஷி போற்றும் போதனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

93. கோஸ்ட துர்க்கையின் சூக்ஷ்ம அம்சமுதற் இறுதியும் ஆனாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

94. லிங்கோத்பவனே காசி தென்காள அத்தியாய் உதயனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

95. பின்னமே பெருக்கிக்கூட்டி வகுத்துக்கழித்து சமமாய் சமாதி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

96. முக்தனே என் ஜீவன்முக்தியே முக்தியுனை சுவாசிப்பவர் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

97. மயிலோனுடனுறை கணநாயகனே நர்த்தன சதாசிவம் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

98. சூனியத்தை செப்பி அனந்தத்தை உணர்த்திய பத்மநாபனே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

99. பரசுராமருன் பையன் நீ ஜமதக்னி ரேணுகை மாத்ரு பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

100. நிர்குண பிரம்மமே உன் சகுணம் நான் என்னோடு கலவாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

101. பிரியா திருவகத்தி லருட்பெருஞ்சோதியாய் எந்நாளும் திகழ்வாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

102. உண்ணாமுலை என் தாய் அண்ணாமலை மக வென் பொருள் நீயே பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

103. கருட நரசிம்ஹ பிரஹ்லாத சொரூபனே தயைபுரி என் மேல் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

104. முடித்தேனிதையினி காப்பது உன் கடன் கடிதிதை சோதி பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

105. தத்துவப்பாடற் இசையொடு கணிதம் உன் சதுர்குணம் பரப்பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

106. அந்தமே ஆமுதற் வுள் கடவுள் வரை நீயே ஆனாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

107. அஷ்டகம் பாடியெனை ஆசீர்வதித்து அன்னை பார்வதியோடு சேர்ப்பாய் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

108. ஞானப்பூங்கோதை போலெனை மணம்புரிந்தென் அஞ்ஞானம் தவிர்த்தருள் பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!

۞
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!
பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலபர பிரம்மாசலா!!
۞

0۞0
பிரம்மாசலம் நீடூழி பல கோடி வாழ் புண்ணியம்,
தீமஹி இயற்றிச்செப்பிய ஸ்ரீ பிரம்மாசல ௮க்ஷரமணமாலை வளமுடன் வாழ்க!
வெண்ணை போலுருகி பக்தி நெய் வீழ்ச்சியாய் கருகி செகத்திருட்டு போக்கி ஒளிப்பிழம்பாய் பளபளவென பிரம்மலிங்க சொரூபமே ௮ரூபமே ௮ற்பமற்பாதீதமே மஹியே வாழ்க வளமுடன்!!
0۞0

!!சுபமஸ்து!!
***
۩